செங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜாவை, அவரது மனைவி விஜயலட்சுமி அரிவாளுடன் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 3 மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து, விஜயலட்சுமி உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.