அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ராயபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பழனியப்பன் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.