புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பூனை குத்திப்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்(34), சரவணன்(58), வெள்ளைக்கண்ணு(36), பாண்டி (36) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டை மற்றும் ரூ 5 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.