அன்னவாசல் அருகே பெருஞ்சுனையைச் சேர்ந்த பழனிச்சாமி, பைக்கில் அன்னவாசல் சென்றபோது, லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியதில், பழனிச்சாமி கீழே விழுந்தார். அவர் மீது லாரி மோதியதில் படுகாயமடைந்த நிலையில், அன்னவாசல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.