அன்னவாசல், சீகம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், அன்னவாசல் போலீசார் சீகம்பட்டி உப்புபாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட விளாப்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (26) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.