விராலிமலையில் அரளை கற்களை கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்!

0பார்த்தது
விராலிமலையில் அரளை கற்களை கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை யூனியன் அலுவலகம் அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் டிப்பர் லாரியில் அரளைக் கற்களை ஏற்றியுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல்துறையினரைக் கண்டதும், லாரியை ஓட்டிச் சென்றவர் தப்பிச் சென்றுள்ளார். காவல்துறையினர் 3 யூனிட் அரளைக் கற்களுடன் டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி