விராலிமலை: 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

251பார்த்தது
விராலிமலை: 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!
விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இடையபட்டி அருகே வேகமாக வந்த காரை சோதனையிட்டதில் 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவிலிருந்து மதுரைக்கு குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஜேஸ்வர் (20) என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.