புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொடிக்கல் பட்டி கிளை சாலையில் நேற்று, அடையாளம் தெரியாத நபர் டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரைக் கண்டதும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். போலீசார் 3 யூனிட் கிராவல் மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்து, கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.