விராலிமலை: மயங்கி விழுந்து தொழிலாளி பலி!

0பார்த்தது
விராலிமலை: மயங்கி விழுந்து தொழிலாளி பலி!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்த கருப்பையா (57) என்பவர், நேற்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்தது. இதுகுறித்து அவரது மகன் திருப்பதி அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.