விராலிமலை: வாகனம் மோதி தொழிலாளி பலி

82பார்த்தது
இலுப்பூர் தாலுகா கோத்திராப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் விராலிமலை அருகே உள்ள தனியார் நூற்பாலையின் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச்.16) இரவு வேலைக்குப் பைக்கில் சென்றார். 

கொடிக்கால்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகேசன் படுகாயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி