கடந்த மூன்று ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3,578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு நவ., மாதத்தில் இருந்து விவசாயிகளிடம் கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48,860 என்ற ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.