தேர்தலில் மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை தராத நிலையில், தூய சக்தி என்று கூறும் பொய்க்கால் குதிரை அரசு தன்னைத் தற்காத்துக் கொள்ள
திமுக கூட்டணியின் காலில் விழுந்துள்ளதாக இபிஎஸ் சாடியுள்ளார். தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர
அரசியல் வியாபாரம் நடத்தி அதிமுகவின் முதுகில் குத்தியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.