புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் மேற்கொள்வதற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீண்டும் முதலமைச்சர் ரங்கசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக டிஸ்.05ம் தேதி சாலை வளத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விஜய் மக்கள் சந்திப்பை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில், மீண்டும் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.