தவெக தலைவர் விஜய்யிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரூ.3 கோடி கடன் வாங்கியுள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எந்த கடனும் இல்லை குறிப்பிட்டுள்ள விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபா, மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோருக்கு கடன் கொடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட:டள்ளார். விஜய் வித்யாஷ்ரம் என்ற பள்ளியின் தாளாளராகவும் விஜய் இருக்கிறார்.