புழல் சிறை விசாரணை கைதி மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு

3பார்த்தது
புழல் சிறை விசாரணை கைதி மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு
கஞ்சா வழக்கில் சேலையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 12-ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலையூரை சேர்ந்த விசாரணை கைதி பாலாஜி (44) என்பவர் திடீரென உயிரிழந்தார். சிறையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி