இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்திய Qatar Energy நிறுவனம்

18பார்த்தது
ஈரானின் தாக்குதல்களால் நேற்று (மார்ச் 03) திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்திய Qatar Energy நிறுவனம், தனது பிற முக்கிய தயாரிப்புகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே போல் யூரியா, பாலிமர், மெத்தனால், அலுமினியம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சாலைப் பொருட்களின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி முதல் இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானை தாக்கி வருகிறது. இதற்கு பதிலடியாக துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை ஈரான் தாக்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி