ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் தனது எல்என்ஜி (LNG) உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. உலகின் 20 சதவீதத் தேவையைப் பூர்த்தி செய்யும் கத்தாரின் இந்த முடிவால், சர்வதேச சந்தையில் எரிவாயு விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றமான சூழல் உலக நாடுகளின் எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.