நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஏப்.8) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ‘ஜெயிலர் 2’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்த படம் இன்னும் 2,3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. விரைவில் கமலுடன் சேர்ந்து நடிக்கவுள்ளேன்” என்றார். தொடர்ந்து, ஜனநாயகன் படம் முடக்கம் குறித்த கேள்விக்கு, “Sorry கருத்து சொல்ல விரும்பல” என கூறிவிட்டுச் சென்றார்.