மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், சினிமா தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மகன் தமிழழகன் நேற்று (பிப்., 14) காலமானார். அவரது இறுதிச் சடங்கு சென்னை தி.நகரில் இன்று நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழழகன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பதிவில், 'அமரர் ஆர்.எம்.வீரப்பனின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.