திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு ‘நல்ல சாவே வராது’ என ஆர்.எஸ்.பாரதி பேசியதை முதல்வர்
விஜய் சட்டப்பேரவையில் கண்டித்தார். இதற்குப் பதிலளித்த பாரதி, குற்றங்களை மறைக்கவே முதல்வர் இதைப் பேசுகிறார் என்றார். மேலும், “மக்கள் சாக வேண்டும் என நான் கூறவில்லை; சாவே வராமல் உயிரோடு இருந்து இந்த ஆட்சியில் நடக்கும் கொடுமைகளையும் கூத்துகளையும் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற அர்த்தத்திலேயே பேசினேன்” என விளக்கமளித்துள்ளார்.
நன்றி: பாலிமர்