‘ராகுல் காந்திக்கு புதிய உத்தரவாதி தேவை’.. நீதிமன்றம் உத்தரவு

3146பார்த்தது
‘ராகுல் காந்திக்கு புதிய உத்தரவாதி தேவை’.. நீதிமன்றம் உத்தரவு
மராட்டிய மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உத்தரவாதியாக இருந்ததால் ராகுல் காந்திக்கு ஜாமீன் கிடைத்தது. சிவராஜ் பாட்டீல் கடந்த டிசம்பர் மாதம் காலமானதால், புதிய உத்தரவாதியை ராகுல் காந்தி அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.