மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பிகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி எம்.பி X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "பிகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் தொடரும்" என கூறியுள்ளார்.