பீகாரில் தேர்தல் பேரணி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்கார் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பரப்புரை வாகனம் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. நவாடா பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்ட நிலையில், கூட்டத்தில் திடீரென கார் மோதியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ராகுலுடன், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.