காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வரும் மார்ச் 5-ம் தேதி காஞ்சிபுரம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் கிராம கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்திற்கு வருகை தருகிறார். கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியால் தள்ளிவைக்கப்பட்டிருந்த இவரது பயணம் தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த வருகை காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.