தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில்,
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் அருள்முருகன் மற்றும் வாளாடி கார்த்திக் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூவிருந்தவல்லி, நாவலூர் ஆகிய 5 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு சம்பந்தப்பட்ட 44 ஆவணங்கள் மற்றும் 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டன.