பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட், குறை மற்றும் புகார் பதிவு, உணவு ஆர்டர், சலுகை கட்டண டிக்கெட் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் பெறலாம். ஜூலை மாதம் அறிமுகமான இந்த செயலியில் ஆர்-வாலட் தொகையை மாற்றும் வசதியும் உள்ளது. பயணிகள் அனைவரும் செயலியை பயன்படுத்துமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.