திருச்சி ரயில்வே மண்டல அலுவலக நுழைவு வாயிலில் இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச்.4) அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிப்பதாக கூறும் வேளையில், இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்த பெயர் பலகையை உடனடியாக தமிழில் மாற்றியமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.