சென்னை: “நிலம் ஒதுக்கீட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், "ரயில் திட்ட பணிகள், நிலம் கையப்படுத்துவதில் தாமதம் இருக்க கூடாது" என அறிவுறுத்தியுள்ளது. ‘ரயில் திட்டங்களுக்கு 75% நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை’ என தெற்கு
ரயில்வே கூறியிருந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.