சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தண்டவாளங்களை கடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தண்டவாளங்களை கடக்க முயன்ற 384 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 450 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.