உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சார்பக் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.