அடிப்படை வசதிகள் இல்லாத ரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது? என்று நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வியெழுப்பியுள்ளார். இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர், ரயில் நிலையங்களில் காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி, கேட்டரிங் சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கும் ‘ஆதர்ஷ்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினார்.