மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: ரயில்வே தொழிற்சங்கம் முடிவு

3057பார்த்தது
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்: ரயில்வே தொழிற்சங்கம் முடிவு
மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த ரயில்வே தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. 
சென்னை பெரம்பூரில் நேற்று (பிப்., 07) நடைபெற்ற எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தின் 107வது ஆண்டு ஸ்தபகர் தின விழாவில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனியார் மையம், அவுட்சோர்சிங், ஒப்பந்த முறைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.