தமிழ்நாட்டில் இன்று (ஏப்.8) இரவு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் அகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.