தமிழகத்தில் தொடர்ந்து ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (அக்.2) இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், கடலூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.