5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

21பார்த்தது
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால் இன்று (நவ., 19) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி