நீலகிரி, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம் மற்றும் நெல்லை, கோவையில் மலைப்பகுதிகளில் இன்று (ஜூன் 04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல், கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.