தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்!

2பார்த்தது
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்!
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ.4) முதல் தமிழகத்தில் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நவ. 6, 7, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி