தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.22) மழையானது 11 மாவட்டங்களில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை மறுநாள் (நவ.23) மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.