தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.8) இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூரில், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.