தமிழகத்தில் இன்று (மே.22) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது