தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (மே.28) மாலை 4 மணி வரை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.