முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக (CDS) தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினெண்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். டெல்லியில் உள்ள தேசிய
போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நாட்டின் வீரர்களுக்கு அவர் தனது வீரவணக்கத்தை செலுத்தினார். ராணுவத் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவரது நியமனம், நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்குப் பெருமிதத்தையும் புதிய வீரியத்தையும் அளித்துள்ளது.