ஐபிஎல் 2026 தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷான் 91 ரன்களும், கிளாசன் 40 ரன்களும் விளாசினர். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு 217 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.