உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அவர், சிகிச்சைகள் குறித்தும் விசாரித்தார். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.