'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் 'ஜெயிலர் 2' இல் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உடன் இணைகிறார். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'கூலி' திரைப்படம் தற்போது திரையரங்குகளை அதிர வைத்து வருகிறது. இந்த நிலையில், ரஜினி தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்க உள்ளது.