SIR-ஐ எதிர்த்து போராட வந்த தவெக நிர்வாகிகளை வேண்டுமென்றே பல கிலோ மீட்டர் சுற்றி நடக்கவைத்து, கலந்துகொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி கொடுமை செய்யும் ஏவல் துறையாக காவல்துறை மாறியுள்ளதாக தவெக துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், காவல்துறை யாருடைய உத்தரவின் பேரில் இவ்வாறு நடந்துகொள்கிறது, காவல்துறைக்கு உத்தரவிட்டவர்கள் யார் பலனடைய, யார் மனதை குளிர வைக்க இதுபோன்ற அடக்குமுறைகளை ஏவி வருகிறார்கள்? என கேள்வியெழுப்பியுள்ளார்.