மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தில் அதிமுகவிடம் உள்ள ஒரே ஒரு இடத்தைப் பெறுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸின் பாமக-விற்குக் கொடுக்குமா, அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தால் மட்டுமே கூட்டணிக்கு வருவோம் என்று கூறும் தேமுதிக-விற்குக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு ஒரு சீட் என்பதால் அதிமுகவின் தம்பிதுரைக்கே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.