நடிகர் ராம் சரண் தனது 'பெத்தி' திரைப்பட விளம்பர நிகழ்வுகளின் போது, ரசிகர்களின் கூட்ட நெரிசலால் கையில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, 'கெவின் குண்டா' என்ற சர்வதேச புகழ்பெற்ற விஐபி பாதுகாப்பாளரை நியமித்துள்ளார். ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டை சேர்ந்தவரான இவர், இத்தாலியின் புகழ்பெற்ற 'கொலோசியம் சாம்பியன் பெல்ட்' வென்ற ஒரு சர்வதேச Mixed Martial Arts சண்டை வீரர் ஆவார். இவருக்கு, ராம் சரண் ஒரு நாளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை சம்பளமாக வழங்குவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.