ரம்ஜான் பண்டிகை: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

4888பார்த்தது
ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உற்சாகம் களைகட்டியுள்ளது. டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் இன்று (மார்ச் 21) காலையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அதே போல் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே தொழுகை மேற்கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர். 

நன்றி: சன் செய்திகள்