சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. தந்தை, மகன் விவகாரம் காரணமாக பாமக தங்களது கூட்டணியை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், கூட்டணி குறித்து வருகிற டிச.30 ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தைலாபுரத்தில் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.